Wynem
Disciple of Prayer
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் என் பெயர் எஸ்தர். எனக்கு 21 வயதாகிறது. புதுக்கோட்டை மாவட்டம், இயேசுவின் பர்வதம் திருச்சபையில் அங்கமாகி சென்றுகொன்டிருந்தோம். 2008இல் அப்பாவிற்கு பொன்னமராவதி தாலுகாவில் அரசு வேலை கிடைத்ததால் குடும்பத்தோடு பொன்னமராவதி வந்துவிட்டோம். பொன்னமராவதியில் ஒரு CSI சபைக்கு 4 வருடகளுக்கு மேலாக சென்று கொண்டு இருந்தோம் . சபை போதகருக்கும் அம்மா அப்பாவிற்கு ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சபைக்கு போவதை அம்மா, அப்பா நிறுத்தி விட்டார்கள். 3 வருடங்களுக்கு மேலாக எந்த சபைக்கும் செல்லவில்லை. Christmas/new yearகு மட்டும் அருகில் உள்ள RC சபைக்கு குடும்பத்தில் யாராவது 4 பேர் செல்லுவோம். ( எங்கள் குடும்பத்தில் மொத்தம் 8 பேர் ). எங்கள சபை போதகர் சபை கட்டுவதாக சொல்லி பணம் வாங்கிவிட்டு அதை கட்டவில்லை என்று சபை மக்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லி சபையிலிருந்து பாதி பேர் பிரிந்து வந்து விட்டார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சபை ஆரம்பித்தார்கள். ஒரு டாக்டர் சபை போதகராக இருந்து சபையை வழிநடத்தி கொண்டு இருந்தார். எங்களையும் சபைக்கு வர சொல்லி அழைத்தார்கள். அருகில் இருந்ததால் நாங்களும் சென்றோம். ஆனால் 1 வருடம் தான் சபை இருந்தது. பிறகு சபை போதகர் சபை நடத்தவில்லை. சபையில் இருந்த எல்லோரும் வேறு சபைக்கு செல்லுகிறார்கள். மிக தொலைவில் இருப்பதால் எங்களால் செல்ல இயலவில்லை. 3 வருடங்களாக எந்த சபைக்கும் போகாமல் வீட்டில் தான் இருக்கிறோம். தினமும் குடும்பமாக சேர்த்து குடும்ப ஜெபம் செய்வோம். ஆனாலும் குடும்பத்தில் பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. லட்ச கணக்கில் கடன் இருக்கிறது .அப்பா வாங்குகிற சம்பளத்தில் 3/4 பங்கு வட்டிக்கும் & கடன் அடைபதற்குமே சரியாக இருக்கிறது. கடன் பிரச்சனையால் அம்மா அப்பாவிற்கு இடையில் எதாவது சண்டை வந்து கொண்டே இருக்கிறது. நான் UG degree முடித்துவிட்டேன் . PG பண்ணுவதற்கு Fees கட்ட முடியாததால் Dropout செய்துவிட்டேன் . வேலைக்கு சென்று இந்த கடனையாவது அடைப்போம் என்று நினைத்தால் வேலையும் கிடைக்கவில்லை.. குடும்பத்தில் யாருக்காவது ஒருவர்க்கு மாற்றி மாற்றி உடல் நலம் சரியில்லாமல் ஆகி விடுகிறது. என்னதான் ஜெபம் செய்தாலும் குடும்பத்தில் சந்தோசம் , சமாதானமே இல்லை. என்னை குறித்தும் , எங்கள் குடும்பத்தை குறித்தும் தேவனுடைய சித்தம் என்ன என்று நான் தொடர்ந்து ஜெபித்து வருகிறேன் , உபவாசம் இருந்தும் ஜெபித்து பார்கிறேன். ஆனால் தேவனிடம் இருந்து எனக்கு எந்த பதிலும் இல்லை. நான்/நாங்கள் என்ன தவறு செய்தோம்/செய்கிறோம் என்று நான் எப்படி தெரிந்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லை. என் ஜெபத்திற்கு ஏன் பதில் இல்லை என்று எனக்கு தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. உலக/ஆவிகுறிய அனைத்து விசியங்களிலும் ஏன் கண்ணீர், கவலையாக இருக்கிறது. எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் தோல்வியில் முடிகிறது. எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. எனக்கு வாழவே இஷ்டமில்லை. எதாவது வழியில் சாவு வந்து தேவன் என்னை எடுத்துகொள்ள மாட்டாரா என்று தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை , ஒவ்வொரு நாளும் கண்ணீர். இப்போது கூட அழுதுகொண்டு தான் இந்த mail ஐ எழுதிக்கொண்டு இருக்கிறேன். பைபிள் வாசிக்கிறேன் , ஜெபம் செய்கிறேன், ஸ்தோத்திர பலிகள் சொல்கிறேன் . ஆனாலும் தேவனுக்கும் எனக்கும் இடையில் எந்தஒரு தொடர்பும் இல்லை. எனக்கு என்ன செய்வது... யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.