Brenura
Disciple of Prayer
கிறிஸ்துவுக்குள் அன்பான Pastor அவர்களுக்கு தயவு செய்து இந்த காரியத்திற்காக ஜெபிக்க கேட்டு கொள்கிறேன். வேர்கிளம்பி அருகிலுள்ள கண்ணனூர் பகுதியில் ஊழியம் செய்து வரும் Brightson என்ற ஒருவர் ஒரு கஷ்டம் என்று வந்து நின்ற போது எனது கணவர் 5 சவரன் நகையை எடுத்து கொடுத்து அடகு வைத்து பணம் எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லி உதவினார்கள். இப்போது 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. திரும்ப கேட்டால் தரக்குறைவாக பேசுகிறார். Phone switched off.. அப்படியே phone attend பண்ணினால் நம்மையே திட்டி வைத்து விடுகிறார். அவருடன் பேச விருப்ப படாமல் கேட்பதையே விட்டு விட்டோம். ஆனாலும் நாங்கள் கஸ்டப்பட்டு வாங்கிய நகையை விட முடியவில்லை. நகை ஏலத்தில் போய் விட்டது என்று கேள்விபட்டோம். மனது வலிக்கிறது. எங்கள் வேதனையை தேவன் அறிவார். ஊழியம் செய்கிறவர் என்று நம்பி கஷ்டத்தில் உதவி,, இப்போது நாங்கள் ஏமாற்ற பட்டு விட்டோம். திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இழந்து விட்டோம். மிரட்டி வாங்கவும் மனம் வர வில்லை. என்ன இருந்தாலும் ஊழியம் செய்கிறவரோ என்ற தேவ பயம் எங்களை தடுக்கிறது. தயவு செய்து அவர் மனம் மாறி வாங்கிய 5 சவரனுக்கு ஈடான பணத்தையாவது தர கர்த்தர் ஏவ வேண்டுமென்று ஜெபித்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.