Karalemearis
Disciple of Prayer
தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக. தகப்பன் மோகன் சி லாசரஸ் ஐயா அவர்களுக்கு வணக்கம். அப்பா நாங்கள் குடும்பமாக துத்துக்குடியில் சிறிய சபையை நடத்தி வந்தோம். தேவன் தந்த திட்டத்தின் படி நாங்கள் குடும்பமாக பஞ்சாப் மாநிலத்தில் barnala district ,jodhur village க்கு வர தாங்கள் கார்த்திக் அண்ணா மூலம் எங்களுக்கு உதவி செய்தீர்கள்.மிக்க நன்றி. இப்போதும் நாங்கள் தேவ கிருபையால் hindi,punjabi எழுத,வாசிக்க கற்றுக் கொண்டோம். பேசுவதில் சற்று சிரமம் இருந்தாலும் நாங்கள் தேவ கிருபையில் அநேக சிறு பிள்ளைகளுக்கு தேவ அன்பையும், வசனத்தையும் போதித்து வருகிறோம். அவர்கள் மூலம் அவர்கள் குடும்பத்தையும் சந்திக்க முயற்சி செய்து வருகிறோம். தேவன் எங்களை வைத்த இடத்தில் பல கிராமங்கள் உள்ளது.jodhpur,cheema khudi-kalan,kothe,patti-solan,jag jeet pura,pako-kanchian என இன்னும் நாங்கள் செல்லாத கிராமங்களும் உண்டு. இவை ஒன்றில் கூட சபை கிடையாது. ஏன் இயேசு,ஊழியம்,என்று கூட அறியாத அநேக ஜனம் உண்டு. இந்நிலையில் தேவ தயவால் நாங்கள் வசிக்கவும், ஊழியம் செய்யவும் தேவன் நல்ல இடத்தை தந்தார். இந்த வீடு ஒருவர் suicide செய்து விற்பனை செய்யப்பட முடியாமல் கைவிடப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது இந்த இடத்தை விற்பனை செய்து விட்டார்கள்.நாங்களும் கடந்த மூன்று மாதங்களாக கிராமங்களை சுற்றி வீடுகள் வாடகைக்கு தேடியும் ஒன்றும் கிடைக்க வில்லை. எங்கள் house owner முன்பே கூறினார். கிராமங்களில் வாடகைக்கு வீடு இருக்காது, விற்பனைக்குத்தான் இருக்கும். ஊழியம் செய்ய நீங்கள் சொந்தமாக இடம் வாங்குங்கள் என்று. ஆனால் நாங்கள் முயற்சி செய்தோம். இதுவரை ஒன்றும் கிடைக்க வில்லை. தேவ தயவால் நாங்கள் வசிக்கும் வீட்டை வாங்கியவர்கள் doctors,அவர்கள் நாங்கள் சிறுவர் மத்தியில் செய்யும் பணியை பார்த்து அவர்கள் இந்த மாதம் நாங்கள் இங்கு தங்க தற்காலிகமாக அணுமதித்து உள்ளனர்.அவர்கள் இங்கு hospital கட்ட உள்ளனர். தேவ னுடைய இராஜ்ஜியம் இங்கு மகிமைப்பட நாங்கள் இங்கு தொடர்ந்து ஊழியம் செய்ய ஒரு இடம் வாங்கவும், சபை கட்டவும் தயவு செய்து எங்களுக்கு உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். அப்பா please எங்களுக்கு உதவி செய்யுங்கள், நாங்கள் மிகவும் சோர்வில் உள்ளோம். இந்த மாத இறுதிக்குள் நாங்கள் இந்த வீட்டை காலி செய்ய வேண்டும். எனவே தயவு செய்து எங்களுக்கு உடனடியாக உதவுமாறு கர்த்தருக்குள் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். முன்பே கார்த்திக் அண்ணா மூலம் தாங்களுக்கு கடிதம் எழுதி உள்ளோம். நீங்கள் வேண்டுமானால் உங்கள் team members யை அனுப்பி எங்கள் நிலையை கண்டு,அவர்களே இடத்தை வாங்கவும் செய்யவும். But please take immediate action appa. please reply us soon.its urgent. Don't hesitate please. We are not in favour situation to come tamilnadu now .so only we can't approach you directly coming there.so please don't mistake us. THANK YOU,GOD BLESS YOU AND YOUR MINISTRY'S APPA. By Beryl Benjamin Fulltruthmission