Bughisok
Disciple of Prayer
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. என் பெயர் சீனிவாசன் நான் கோவையில் உள்ளேன். எனது திருமணம் காதல் திருமணம். 3 வயது பெண்குழந்தை உள்ளது. மனைவி குழந்தை இலங்கையில் உள்ளனர். பொருளாதார சூழ்நிலையினாலும். சிறிது கடன் பிரச்சனையாலும் சில காலம். கோவையில் வேலை செய்யலாம் என்று வந்தேன். ஆனால் இந்த மாதம் சென்னைக்கு அரசு பேருந்தில் பயணத்தின் போது கள்ளகுறிச்சி அருகே. செல்லும் போது. ரோட்டில் மது குடித்துவிட்டு இருந்த சிறு வாலிபர்கள். பாட்டிலை சென்று கொண்டிருந்த பஸ்ஸில் வீச. அது எனது இடது கண்ணில் பட்டு பார்வை. தற்சமயம் இல்லை. ஆபரேசன் செய்த மருத்துவர்கள். புண் ஆறிவிட்டது. சிவப்பு மறைந்தால் தான் பார்வை பற்றி யோசிக்கமுடியுமென கூறி விட்டனர். மேலும் எந்த ஒரு ஆபரேசன் இல்லாமல். இழந்த என் கண்பார்வையை. நித்திய பிதை கர்தாதி கர்த்தரின்னால் மட்டும்மே திரும்ப தரமுடியும் என நான் நம்புகிறேன். யாரோ செய்த தவறுக்கு எனக்கு ஏன் தண்டனை. மேலும் என் பார்வை இழப்பால். வேலைக்கும். பங்கம் வருமோ என அச்சம்மாகவுள்ளது . எனது வேலை போககூடாது. இழந்த எனது இடது கண் பார்வை எந்த ஒரு ஆபரேசன் செய்யாமல். திரும்ப கிடைக்க எனக்காக ஜெபிப்பீர்களா அண்ணா. எனது வேலை இழக்காமல். பார்வை திரும்ப கிடைத்து விட்டால். கர்த்தர் செய்த அற்புதத்தை எங்கு வந்து வேண்டுமானாலும் சாட்சி கூற. தயாராக உள்ளேன். எனது வாழ்வில் கர்த்தர் ஒரு அற்புதம் செய்ய நான் கர்த்தரை. ஸ்தோத்தரிக்கிறேன்.