Risu
Disciple of Prayer
என் பெயர் சுதா மணிகண்டன். நான் சென்னை வளசரவாக்கத்தில் இருக்கிறேன். கடந்த ஐந்து ஆறு வருடமாக எனக்கு இயேசுவின் மேல் உள்ள பற்று மற்றும் நம்பிக்கை விசுவாசத்தால் நிறைய நல்ல விஷயங்கள் பாசிட்டிவான நிறைய நன்மைகள் அனுபவம் பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன். வாழ்க்கையில் இனி எதுவுமே இல்லை எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நான் இருந்த காலகட்டத்தில் கர்த்தர் எனக்கு யாரால நான் பிரச்சினையில் சிக்கி பொருளாதார ரீதியாக மன ரீதியாக மீள முடியாத துயரத்தில் இருந்த இன்னும் அவர்கள் மூலமாகவே என்னைத் அதிலிருந்து தப்ப வைத்து என்னோட நிம்மதியான பழையந வாழ்க்கையை திருப்பிக் கொடுத்து சமாதானத்தோடு வாழ வைத்து அழகு பார்த்தவர் என்னுடைய இயேசப்பா. என் ஜீவனுள்ள நாளெல்லாம் அந்த நன்றியையும் அந்த இறக்கத்தையும் மறக்கமாட்டேன். இப்பொழுது சில காலமாக ஏதோ ஒரு மன பயம் ஒரு நிம்மதி இல்லாத மாதிரி, அது ஏன் எனக்கே தெரியல. நிறைய பொருளாதார பிரச்சனை கடன் பிரச்சனை . மனதில் இனம் புரியாத ஒரு பயம். இயேசப்பா மேல அதிக அளவு விசுவாசம் இருக்கு.எனக்கு தெரிந்தவர்கள் நண்பர்கள் உடன் பிறந்தவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கூட எனக்கு கிடைத்த நன்மைகள் ஆசீர்வாதங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி சாட்சியாகவும் இருக்கிறேன் இன்னமும் இருப்பேன்.இப்போ சிலமாதமாகதான் மனசு ஏதோ மாதிரி இருக்குது எனக்கு என்னன்னு சொல்லவே தெரியல. ஒரு பயம் பதட்டம். இந்த கடன் பிரச்சனையால எனக்கும் என் கணவருக்கும் சண்டை வந்து விடுமோ, வெளியில் ஏதாவது அவமானப்படுற மாதிரி நடந்துவிடுமோ என்று மன உளைச்சல் ஆகவே இருக்கிறது தேவனிடத்தில் அதீத நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் நான் தேவனிடத்தில் இன்னும் அதிக பற்றுதல் இன்னும் அதிக விசுவாசத்துடனும் இருக்கவும் குடும்பத்தில் சமாதானத்திற்கும் கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு சமாதானமான நிம்மதியான வாழ்க்கைக்காகவும் எனக்காக தேவனிடத்தில் ஜெபம் பண்ணுங்கள். கணவர் மணிகண்டன், பிள்ளைகள் வெங்கடேஷ், ஹரிஹரன். பிள்ளைகளின் படிப்பிற்காகவும் எதிர்காலத்திற்காக, கணவரின் சினிமாத்துறையில் நல்ல வேலை வாய்ப்புக்காகவும். அவர் ஒரு இயக்குனர் பட வாய்ப்புகள் கிடைத்து, அவர் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைத்து சினிமாத்துறையில் நல்ல நிலைமைக்கு வருவதற்கு ம், தற்போது குடும்பத்தில் எனக்கு உள்ள கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு பயம் இல்லாத நிம்மதியான சமாதானமான வாழ்க்கை வாழ்வதற்கும் எனக்காக ஜெபியுங்கள். என் இயேசப்பாவினிடத்தில் மீண்டும் மீண்டும் அதிக விசுவாசமும் பற்றுதலும் இருக்கும் படிக்கும் எனக்காக ஏசப்பா இடம் ஜெபம் பண்ணுங்கள் நன்றி.